கொழும்பு – 02 நவம் மாவத்தையை சேர்ந்த 34 வயதான வர்த்தகர், அநுராதபுரம் – கல்போத்தேகம பகுதியில் வைத்து கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு அவர் சென்ற போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இதன்போது, கூரான ஆயுதத்தால் குறித்த வர்த்தகர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

