
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள மீராவோடை பகுதியில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று நடைபெற்றது.ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் ஏ.குணராஜசேகரம், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.சிஹான், கே.ஜௌபர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு தரப்பினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

