16 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (10) காலை 7 மணியுடன் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) இந்த அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சம்பள முரண்பாடு, சுகாதார சேவையாளர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட 6 விடயங்களை முன்வைத்து அவர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தாதியர்கள், மருத்துவ இரசாயன நிபுணர்கள், குடும்ப நலச் சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 50,000 பேர் இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தினை முன்னெடுத்திருந்தனர்.

