கோப் குழுவினால் 10 அரச நிறுவனங்களுக்கு அழைப்பு

235 0

இலங்கை முதலீட்டுச் சபை உள்ளிட்ட 10 அரச நிறுவனங்களை எதிர்வரும் நாட்களில் கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் இலங்கை முதலீட்டுச் சபை கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் நிறுவுவதற்கான மதிப்பீடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, தேசிய இளைஞர் சேவை மன்றத்துடன் இளைஞர் சேவை தனியார் நிறுவனம் எதிர்வரும் 16 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணி சீர்திருத்த ஆணைக்குழு எதிர்வரும் 17 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.