மன்னாரில் மேலும் 26 தொற்றாளர்கள் அடையாளம்

302 0

மன்னார் மாவட்டத்தில் நேற்று  (8) மேலும் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 2,547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று (9) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையிலேயே,இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 154 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 7ஆம் திகதி மன்னாரை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இவ்வருடம் 2,530 கொரோனா தொற்றாளர்களும் தற்போது வரை 2,547 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.