சுகாதார முறைப்படி கோவிலில் கைவரிசை

284 0

கொட்டும் மழையிலும், சுகாதார முறைப்படி முகக்கவசம் அணிந்துவந்த நபரால்,  காரைதீவு நந்தவனப் பிள்ளையார் கோவிலில் இன்று (09) அதிகாலை 04 உண்டியல்கள் தகர்க்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

கோவிலிலுள்ள சி.சி.டி.வி கமெராவிலும் இந்தத் திருட்டு பதிவாகியுள்ளது.

அதிகாலை 12.30 -1.30 மணி வரையான நேரப் பகுதியில் திருடனொருவன் தலைக்கவசத்துடன், சுகாதாரமுறைப்படி  முகக்கவசம் அணிந்து மதில்மேலால் ஏறி, கோவிலுக்குள் குதித்து சுமார் ஒரு மணிநேரமாக நிதானமாக இத்திருட்டை நடத்தியுள்ளான்.

மழை பெய்துகொண்டிருப்பதும்  திருடனைக் கண்டதும் நாய் குரைப்பதும் கமெராவில் பதிவாகியுள்ளது.

காலையில் உண்டியல்கள் தகர்க்கப்பட்டு அங்கிருந்த பணம் திருடப்பட்டமை கோவில் நிர்வாகத்தினருக்கு தெரியவந்ததுடன், காரைதீவு மற்றும் சம்மாந்துறைப் பொலிஸில் அவர்கள் முறையிட்டுள்ளனர்.