பர்தா ஆடை விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றுக்கு மொறோக்கே தடை விதித்துள்ளது.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தம்மிடமுள்ள அனைத்து ஆடைகளையும் விற்பனை செய்து நிறைவு சய்யுமாறு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு காரணங்களின் நிமிர்த்தம் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக பர்தா ஆடை பயன்படுத்தப்படுவதாக அந்த நாட்டின் உள்விவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளதாக பீ.பீ.சி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.