கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பை காண முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதேநேரம், பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

