பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் இதனைத் தெரிவித்தார்.
தொற்றுறுதியானவர்களில் 18 சிறுவர்களும், 6 பணியாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையோருக்கு இன்றைய தினம் கொவிட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் தெரிவித்தார்.

