இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க காவல்துறை பிரிவுக்குட்பட்ட எவரியவத்த பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைத்து நேற்றுமுன்தினம் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு 13, ப்ளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நபரிடமிருந்து சுமார் 2,800 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 180,000 ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

