சேலம் மாவட்டத்தில் அனுமதி இல்லாத நேரத்தில் பட்டாசு வெடித்த 67 பேர் மீது வழக்கு

169 0

நாமக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 30-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தீபாவளி பண்டிகையையொட்டி காற்று மாசு ஏற்படுவதை தடுக்க காலை மற்றும் மாலை நேரங்களில் தலா 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தில் அனுமதியில்லாத நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து சேலம் புறநகர் மாவட்டத்தில் நேற்று அனுமதியில்லாத நேரத்தில் பட்டாசு வெடித்த 32 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் மீது தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் சேலம் மாநகரில் போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல்கோடா உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது மாநகரில் அனுமதி அளித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த 35 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 30-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.