எரிவாயு தட்டுப்பாட்டுக்கு வழி வகுக்க வேண்டாம் – நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம்

170 0
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவரான ரஞ்சித் விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் எரிவாயுவின் விலையை 4000 ரூபாவால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு சமைக்க எரிவாயு தேவைப்படுவதாகவும், எரிவாயு தட்டுப்பாட்டுக்கு வழி வகுக்க வேண்டாம் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்