ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றை நாடினார் டயனா கமகே

153 0

கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உள்ளிட்ட 11 பேர் அந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

20 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் குற்றஞ்சுமத்தி தமது கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்குப் பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு முன்னதாக நியாயமான ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்குப் பிரதிவாதிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, தமது கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம், சட்டத்தின் முன்னிலையில் வலுவற்றதாகும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றில் அவர் கோரியுள்ளார்.