தடையின்றி மின்சாரம் வழங்குவோம்

155 0

பல தொழிற்சங்கங்கள் இன்று (03) முன்னெடுத்த போராட்டத்தில் இலங்கை மின்சார சபையின் பெரும்பான்மையான ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்ட விடயத்தை அமைச்சர் தெரிவித்தார்.

மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல், தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியம் இன்று  காணப்படுவதாக தெரிவித்தார்.

எரிபொருள், எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்பு அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்றும்  வலியுறுத்தினார்.

யுகதனவி அனல்மின் நிலைய ஒப்பந்தத்தை பொய்யான அடிப்படையில் சமூகமயமாக்க எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்துடன் தொடர்புடைய சில குழுக்களும் முயற்சிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தூண்டிவிடுவதற்கான நேரம் இதுவல்ல என்றும் நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தேவை என்றார்.