பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

331 0

அரசாங்க வீடுகளைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர், கொழும்பு குற்றவியல் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அரசாங்க வீடுகளைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து, குறித்த சந்தேகநபர், கொழும்பில் இரண்டு நபர்களிடம், 6 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.