அலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக திருமதி. பத்மா வேத்தாவ அவர்கள் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவராக சேவையாற்றிய திருமதி. பத்மா வேத்தாவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்பம் முதல் அதன் மகளிர் அமைப்பின் ஆர்வலராக செயற்பட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் திருமதி. வேத்தாவின் கணவரான கலைஞர் பந்துல விஜேவீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

