ஆனமடுவ – கொட்டுகச்சிய பிரிவெனாவில் 18 பிக்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சரணங்கர பிரிவெனாவில் கல்வி கற்கும் மாணவ துறவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
சரணங்கர பிரிவெனாவில் சுமார் 75 மாணவர் பிக்குகளும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான துறவிகள் தற்போது தனி மைப்படுத்தப்பட்டு சுகாதார ஆலோசனையின் பேரில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.



