இராணுவ தளபதியின் அறிவுறுத்தல்

263 0
சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக பரவி வருவதால் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் புத்திசாலித்தனமாக செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தளபதி கூறியுள்ளார்.

“தினமும் 500 முதல் 600 நோய்த்தொற்றுகள் கண்டறியப்படும்போது பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.