சில மாகாணங்களில் கடும் மழை பெய்யலாம்

242 0

இலங்கையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்னும் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட, வட மத்திய, வட மேல், கிழக்கு, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடி முழக்கத்துடனான மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

வட, வட மத்தி, வட மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, திருகோணமலை மாவட்டத்தில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி சில இடங்களில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.