தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

245 0

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின.

தினமும் மாலை வேளையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதோடு, வீதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுவதோடு, சில வீதிகளில் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு, வான்எல, ஜயந்திபுர மற்றும் பேராற்றுவெளி, தம்பலாகாமம், முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்தோடு, சில வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.