கொழும்பு – வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுக்கு அடிமையான 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 44 பேர் கொவிட் தடுப்பூசி பெறாதவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

