தெல்தெனியவில் கைத்துப்பாக்கிகள், சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் இருவர் கைது

225 0

கைத்துப்பாக்கி மற்றும் தோட்டக்காள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் தெல்தெனிய, ராஜவெல்ல பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அமெரிக்க பிரஜை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தெல்தெனிய காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து பதிவு எண் தகடு இல்லாத இரு மோட்டார் சைக்கிள்கள், நான்கு வாக்கி டாக்கிகள், சந்தேகத்திற்கிடமான பிற பொருட்கள் மற்றும் 7,600 ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தெல்தெனிய காவற்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.