இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கம்!

220 0

நாட்டில் கொவிட் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி கொவிட் தடுப்பு செயலணி முன்னெடுத்த கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தி, நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் செயற்பாட்டில், மாகாண மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.