யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உடன்படிக்கை விவகாரம் குறி த்து பொது மக்கள் சார்பாக நாங்கள் முன்வந்து செயற்படுகிறோம் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உடன்படிக்கைக்கு எதிராக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் இன்று மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கெரவலப்பிட்டிய LNG மின்னுற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கியமைக்கு எதிராக ரிட் மனு உத்தரவு கோரி தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
வெங்கமுவே நாலக தேரர், பேராசிரியர் குணதாச அமரசேகர, வைத்தியர் வசந்த பண்டார மற்றும் நீதிபதி நுவன் பெல்லந்துடாவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
LNG மின் நிலையத்தை அமெரிக்காவுக்குக் குத்தகைக்கு விடுவதை உடனடியாக நிறுத்துமாறு நீதிமன்ற உத்தரவு கோரி இன்று நாங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அவ்வாறு செய்வதற்குக் காரணம், இந்த தேசிய வளங்கள் வெளி நாட்டவர்களுக்குக் குத்தகைக்கு விடப்படுவதை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை.
இதற்கு பொதுமக்கள் முன்வர முடியாது என்பதால் பொது மக்கள் சார்பாக நாங்கள் முன்வந்து செயற்படுகிறோம்.
இது தவிர தேரர் ஏன் அமைதியாக இருக்கின்றீர்கள் என்று மக்கள் எங்களை கேட்கிறார்கள். நாட்டு மக்கள் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் வாக்களிக்கச் சொன்னீர்கள், நாங்கள் வாக்களித்தோம், எனினும் எமக்குத் தேவையான எதுவும் கிடைப் பதில்லை ஏன்? என எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
ஏன் எங்களை வாக்களிக்குமாறு சொன்னீர்கள், நீங்கள் பொய்தானே சொன்னீர்கள் என்றும் அவர்கள் கேட்கின்றனர். மக்களின் கேள் விகளுக்கு நாங்கள் பதிலளிக்க முடியாமல் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உடன்படிக்கைக்கு கையெழுத் திடப்பட்ட விதம் மிகவும் அநாகரிகமான முறை என்றும் அதைப் பாராளு மன்றத்தில் முன்வைக்காமல், அமைச்சரவையில் முன்வைக்காமல், தனி நபரின் தன்னிச்சையான செயலாகும். இது சட்டவிரோதமான செயல், இது அரசியலமைப்புக்கு எதிரான செயல்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் காரணமாக நாட்டின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப் படுகின்றது என்றும் நாட்டின் பாதுகாப்பை அமெரிக்காவுக்கு வழங்குவது போன்று அமைந்துள்ளது என்றும் சுவிட்சை மறுபுறம் திருப்பியது போன்று எந்த நேரத்திலும் நாட்டின் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றலாம் என்றும் இதை அனுமதிப்பது மோசமானது என்றும் தேசிய அமைப்புகளாகிய நாங்கள் இதற்கு எதிராக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கக் குடிமகனை நிதி அமைச்சராக நியமிப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பேராசிரியர் குணதாச அமரசேகர பதில் வழங்கியுள்ளார்.
ஆமாம், அது உண்மைதான், அது மிகவும் அநாகரிக செயல் என்றும் குறித்த நபர் பாராளுமன்றத்துக்கு வர விரும்பினால், அவர் நிதியமைச்சர் ஆக விரும்பினால் குறைந்தபட்சம் அவர் அமெரிக்கக் குடியுரிமையை நீக்க வேண்டும் என்று அமரசேகர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனத்துடன் தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இங்கு நான்கு ஒப்பந்தங்கள் உள்ளன.
அரசாங்கத்தின் இரண்டு நிறுவனங்களில் ஒன்றின் பங்குகள் விற்கப்பட்டுள்ளன என்றும் மற்ற நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தை மீறி சகல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் எரிசக்தி கொள்கைக்கு மாறாக மற்றும் அமைச்சரவையின் சரியான அனுமதி இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் தான் முறையான அனுமதி இல்லாமல் கையெழுத்திடப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களை இல்லாமல் செய்ய நாங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளோம்.
திறைசேரி செயலாளர் பதின்மூன்று முறை அமைச்சரவையைத் தவறாக வழிநடத்தியுள்ளார்.
அமைச்சரவையிலிருந்து தகவல் மறைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் அனுமதி பெறப்பட்டது. கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கையெழுத்திடப்பட்ட இறுதி ஒப்பந்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவையிலும் குறித்த ஒப்பந்தம் முன்வைக்கப்படவில்லை என்றும் இந்த அமைச்சரவையில் இந்தப் கருவூல செயலாளர் கள்ளன் – பொலிஸ் விளையாட்டு விளையாடுகிறார் என்றும் நாங்கள் அவருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை திணைக் களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளோம் என்றும் இந்தச் செயல் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாரிய மோசடியில் ஈட்டுப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

