காட்டு யானை தாக்கி வயோதிபர் பலி

345 0

ஏறாவூர் காவல்துறை அதிகார பிரிவின் பதுளை வீதியை அண்மித்த பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான வயோதிபர் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் கொடுவாமடு கிராமம் காளிகோயில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே பலியானார்.

சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.