கோப்பாயில் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு

413 0

யாழ்ப்பாணம் – கோப்பாய், பூதர்மடம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பலொன்று அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், அயல் வீடொன்றிலுள்ள இளைஞனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.

இதற்கு பழிதீர்க்கும் நோக்கில் குறித்த இளைஞர், கும்பலுடன் வந்து இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறித்த வீட்டின் யன்னல்கள், வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி மற்றும் சிற்றுந்து என்பவற்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த 58 வயதான நபரொருவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.