பூட்டை உடைத்து பாடசாலை திறப்பு

259 0

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில், 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் நேற்று (21) திறக்கப்பட்டன.

இந்நிலையில், வெலிமடை ரத்கரவிட்ட மாளிகாதென்ன ஆரம்ப பாடசாலையின் அதிபர்,
பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்து, பாடசாலையின் பிரதான வாயிலில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துகொண்டு உள்நுழைந்தார். அதன்பின்னர், மாணவர்களும் பாடசாலைக்கு
வந்தனர். அப்பாடசாலைக்கு நேற்றையதினம் இரண்டு ஆசிரியைகளும் ஆசிரியர்கள் இருவரும் வருகைதந்தனர்.

மதவழிபாடுகளின் பின்னர் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. வெலிமடை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தொலைபேசியின் ஊடாக அறிவுறுத்தியதன் பின்னர், அந்த ஆசிரியர், பூட்டை உடைத்துள்ளார். எனினும், பூட்டை பலவந்தமாக உடைக்கப்பட்டமைக்கு எதிராக அப்பாடசாலையின் அதிபர் டப்ளியு. எம். குணவர்தன, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.