92 ஒக்டென், ஒட்டோ டீசலின் விலை அதிகரிப்பு!

312 0

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது.

இதற்கமைய எரிபொருள் விலை திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

லங்கா IOC ஒரு லீற்றர் 92 ஒக்டென் மற்றும் ஒட்டோ டீசலின் விலையை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இன்று முதல் ஒரு லீற்றர் 92 ஒக்டென் ரூ .162 க்கும், ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் ரூ .116 க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் எத்தகைய விலை மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.