அரிசி விலைகள் அதிகரிப்பு

227 0

பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை, மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

அதன்படி, கீரி சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும், சம்பா நாட்டு அரிசி கிலோ 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம்சம்பா அரிசி  155 ரூபாய்க்கும்,  ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.