’தடுப்பூசியைப் போன்றே முகக்கவசமும் காக்கும்’

247 0
முகக்கவசம் அணிவது தடுப்பூசியைப் போன்றே அதே பாதுகாப்பை அளிப்பதுடன், கொரோனா வைரஸைத் தடுக்க உதவுகிறது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் வெளியில் சுற்றும்போது நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை மறந்துவிட்டதாகத் தெரிகிறது என்று குடும்பநல வைத்திய நிபுணரும் குடும்பநல வைத்திய சங்கத்தின் தலைவருமான டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்தார்.

மக்கள் மற்றொரு கொவிட் அலையை அழைக்கும் வண்ணம் தற்போதைய சுகாதார விதிகளுக்கு குறைந்த மரியாதை செலுத்தி பயணங்களை மேற்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

அனைத்து அடிப்படை சுகாதார நடைமுறைகளையும் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், வெளியில் செல்லும்போது மக்களை தேவையில்லாமல் முகத்தைத் தொட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பயணங்களை குறைத்து தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.