குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு: முதலாவதாக இலங்கை விமானம் தரையிறங்கியது

141 0

சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்தியா வின் குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியி னால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தி லிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற விசேட விமானம், குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக தரையி றங்கியது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் திறப்புவிழாவில் முதல் விமானமாக இலங்கை விமானம் தரையிறங்கியது.

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இலங்கையிலிருந்து முதலாவது விமானம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய சென்றுள்ளமை விசேட அம்சமாகும்.

 

கடந்த ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான இணையத்தளம் மூலம் இருதரப்பு உச்சி மாநாட்டின் போது, ​குஷிநகர்​சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் முதல் சர்வதேச விமானம் இலங்கை யாத்திரிகர் களை ஏற்றி வரும் முதல் விமானம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் அறிவித்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதன்படி , அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தின் 100 பௌத்த தேரர்கள் குஷிநகர்​சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் நாளை மாலை கொழும்பு திரும்ப உள்ளமை தெரியவந்துள்ளது.

 

பௌத்தர்களின் புனித நகரில் திறக்கப்பட்ட சர்வதேச விமான தளத்தில், இலங்கை விமானம் முதலாவதாகத் தரையிறங்கியமை வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாகும்.

மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் வஸ்கடுவ கபிலவஸ்து புனித சின்னங்கள் சகிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய உயர்தானியரகம் தெரிவித்துள்ளது.