நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பலி

229 0

மெதகம, பெல்லன் ஒய பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நீராட மூன்று சிறுவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

7 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மெதகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.