மட்டக்களப்பில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

126 0

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இன்று (20) அதிகாலை தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் ஒருபகுதியும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை வீட்டின் முன்பகுதி சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளதுடன். இது இரு குடும்பங்களுக்குள்ளே ஏற்பட்ட சண்டை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்