முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் கிரியெல்லவின் மகள்!

244 0

மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்திராணி கிரியெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு இலங்கையில் பல முக்கிய அரசியல் கட்சிகள் போட்டிக்கு பல புதிய முகங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் பிரபல அரசியல் காட்சிகள் பல போட்டியிடவுள்ளன. இது மத்திய மாகாண சபை தேர்தல் வரலாற்றிலேயே நாட்டின் அரசியலில் ஒரு முன்னோடியாக அமையவுள்ளள்ளமை தெரியவந்துள்ளது