வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி

292 0

வவுனியா உளுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று (17) மாலை உளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருடன் மோதி, வீதியால் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.