21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா? குறித்த தீர்மானம் நாளை -ஆசிரியர் சங்கத்தில் தலைவர்

332 0
எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது குறித்து நாளைய தினம் கூட்டிணைந்த அறிக்கை ஒன்றை அதிபர்- ஆசிரியர் சங்கங்கள் இணைந்து முன்வைக்கவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பஞ்ஞாசேகர தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தைக் கைவிடுமாறு பல தரப்பினரும் அதிபர்- ஆசிரியர் களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் சில குழுக்கள் தங்களை மிரட்டு வதாகவும் அவ்வாறு மிரட்டுவதன் ஊடாக பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.