கொரோனா தொற்று ஏற்பட்டு 2 முதல் 6 வாரங்களுக்குள் ஏற்படும் நோய் காரணமாக இலங்கையில் மொத்தம் நான்கு சிறுவர்கள் மரணித்துள்ளனர் என்று சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர்களில் உள்ள பல அமைப்பு அழற்சி நோய்க்குறி (MIS-C) ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்டது.
இந்த நோய்க்குறி இந்த வருட ஆரம்பத்தில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இந்த நோய்க்குறி பாதிக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

