தன்னை தீண்டிய நாகபாம்புடன், 15 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில், இன்று (17) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்த போது, பாம்பு கடிக்கு இலக்கானார்.
இதையடுத்து, குறித்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து அந்த பாம்பை பிடித்து, போத்தலில் அடைத்துக் கொண்டு, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதன்போதே, சிறுவனை கடித்தது நாகபாம்பு என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

