4 வாகனங்களுடன் கார் மோதி கோர விபத்து! – இருவர் பலி

292 0

சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, நான்கு வாகனங்கள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டத்தின் மீகஹவத்த, தெல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது எனக் காவற்துறை தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

குறித்த கார் நிர்மாணப்பணியில் இருக்கும் பாலம் ஒன்றில் இருந்த பீப்பாய் ஒன்றில் மோதிய பின்னர் முன்னால் வந்த இரண்டு ஓட்டோக்களுடனும், மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மற்றும் லொறி ஒன்றுடனும் மோதியுள்ளது எனப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் ஓட்டோ ஒன்றின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு மரணித்தவர்கள் ஹோமாகம மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த 31 வயது மற்றும் 38 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்