தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் தர வேண்டும்- ஜி.கே.வாசன்

207 0

அரசு போக்குவரத்து, பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் தர வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனாவால் அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சர்க்கரை ஆலைகள், தேயிலை வாரியம், கதர் வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இச்சூழலில் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் தீபாவளி பண்டிகை போனசை விட அதிமாக இந்த வருடம் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

எனவே தமிழக அரசு இந்த வருடம் அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சர்க்கரை ஆலைகள், தேயிலை வாரியம், கதர் வாரியம் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால போனசாக மொத்தம் 25 சதவீதம் கொடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.