பிரான்சில் நேற்று இடம்பெற்ற வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு!

221 0

அண்மையில் கனடா மண்ணில் கோவிட் 19 தொற்றினால் சாவடைந்த கலைஞர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள சோதியா கலைக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று 13.10.2021 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு உணர்வோடு இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடரினை வர்ணராமேஸ்வரன் அவர்களின் மூத்த சகோதரரின் பிள்ளைகள் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினால் வர்ணராமேஸ்வரன் அவர்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்கள் வாசித்தளித்தார்.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அறிக்கையினை பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் வாசித்ததுடன் வர்ணராமேஸ்வரன் அவர்கள் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்திருந்தார்.நினைவுரைகளை கலைஞர்களின் சார்பில் திரு.பரா மற்றும் திரு. அருள்மொழித்தேவன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.இந்நிகழ்வில் பல கலைஞர்களோடு . பொதுமக்களும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியிருந்தனர்.

நிறைவாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு)