தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் விருப்ப இடமாற்றம்

29 0

பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் தொடக்க கல்வி இயக்கக உதவி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அவர்களை விருப்ப மாறுதல் அடிப்படையில் வேறு இடங்களுக்கு மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இடமாற்றம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய செல்வகணேசன் அம்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் தொடக்க கல்வி இயக்கக உதவி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், ஸ்ரீபெரும்புதூர் ராதாகிருஷ்ணன் ஆவடிக்கும், செங்கல்பட்டு நாராயணன் மதுரை மேலூர் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டனர்.

பள்ளி கல்வி ஆணையரகம் உதவி இயக்குனர் ராஜசேகரன் செங்கல்பட்டு புனித தோமையர் மலை அதிகாரியாகவும், ஆவடி கற்பகம் சென்னை வடக்கு மாவட்ட அதிகாரியாகவும், சென்னை கிழக்கு ரவிச்சந்திரன் சென்னை மத்திய மாவட்டத்திற்கும் விருப்ப மாறுதல் பெற்றனர்.

தொடக்க கல்வி உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன் பள்ளி கல்வி ஆணையரக உதவி இயக்குனராகவும், சென்னை வடக்கு மாவட்ட சுரேந்திர பாபு சென்னை தெற்கு மாவட்ட அதிகாரியாகவும், திருத்தணி முனிசுப்புராயன் அரக்கோணத்திற்கும், சேலம் சுமதி சேலம் மாவட்டம் ஊரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.