சதொச வெள்ளைப்பூண்டு மோசடியுடன் எனக்கு தொடர்பிருக்கிறது என்று நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சு பதவியை துறப்பதோடு மாத்திரமின்றி இலங்கை அரசியலிலிருந்தும் விலகுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சதொச வெள்ளைப்பூண்டு மோசடி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்த நாள் முதல் முறையான விசாரணைகளும் , சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

