மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை – ஜி.எல் பீரிஸ்

391 0

மாகாண சபை தேர்தலை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வாதப்பிரதிவாதங்களை துறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்திய வெளியுறவு செயலர் ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. அதற்கான அதிகாரமும் இந்தியாவிற்கு கிடையாது. ஏனெனில் தேர்தல் தொடர்பில் அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும்  என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கை இவ்வருடத்தின் இறுதி பகுதியில் கிடைக்கப் பெறும்.தேர்தல் முறைமையில் முழுமையாக மாற்றம் ஏற்படுத்தப்படும்.தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பல விடயங்களுக்கு பொருத்தமற்றதாக உள்ளது  எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.