சுவிட்சர்லாந்தில் தமிழர்களுக்கு பெருமை தேடித்தரும் இளையோர்களின் முயற்சி

317 0

சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ் இனத்திற்கு பெருமை தேடித் தந்திருக்கும் தமிழ் நடனக்குழுவான Dream Creation Dance Crew இளைஞர்களுக்கு இலங்கை வடமாகாண நிர்வாக மருத்துவப் பணிப்பாளர், யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியக் கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy) பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து நாட்டின் தேசிய தொலைக்காட்சியான SRF 1இல் நாளை மறு தினம் இரவு நடைபெற இருக்கும் நகரமும், கிராமமும் எனும் பல் திறன்போட்டி நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட இளங்கலைஞர்களை கொண்ட Dream Creation Dance Crew நடனக்குழுவினர் பங்குகொள்ளும் இறுதிப்போட்டி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த குழுவிற்கு வைத்தியக் கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த இறுதிப்போட்டியின் தீர்வானது 50 வீதம் நடுவர்களின் தீர்ப்புக்கள் மூலமும், 50 வீதம் சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் மக்களின் வாக்குகளின் மூலமும் தீர்மானிக்கப்படவுள்ளது.

எனவே இவ் இளம் தமிழ் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களும், ஏனைய நாட்டு மக்களும் அவர்களுக்கு வாக்களித்து அவர்களின் வெற்றிக்கு உதவுவோமாக.

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் பிற இன மக்களையும் Dream Creation Dance Crew நடனக் குழுவினருக்கு வாக்களிப்பதற்கு ஊக்கப்படுத்தி வெற்றி பெறுவதற்கு வழி செய்வோம் என கோரியுள்ளார்.

இவ் இளம் கலைஞர்கள் இப்போட்டியில் வெற்றிபெறுவது தமிழ் மக்களுக்கு சுவிற்சர்லாந்து நாட்டில் கிடைக்கும் ஓர் வரலாற்றுப் சிறப்புப் பதிவாகும். சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கே பெருமை.

தேடிக்கொடுப்பவர்களாகவும், தமிழ் மக்களின் சுவிற்சர்லாந்து வரலாற்றில் நீங்காத இடத்தைப் பதிவு செய்தவர்களுமாக இவ் இளம்கலைஞர்கள் இன்று ஒளிர்கிறார்கள்.

சுவிற்சர்லாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துமேடை போட்டி நிகழ்வுகளிலும் இந்த இளங்கலைஞர்கள் தமது நடன, கலைத்திறமையினை வெளிப்படுத்தி பார்வையாளர்களினதும், நடுவர்களினதும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.