வவுனியாவில் ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான கயமுத்துக்கள் நான்கினை வைத்திருந்த மூன்று பேரை விசேட அதிரடிபடையினர் கைதுசெய்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வவுனியா பிரபல உணவகத்துக்கு முன்பாக வைத்து அந் நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து நான்கு கயமுத்துக்களை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது. அவற்றின் பெறுமதி ஒன்றரைக்கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது,
கைதுசெய்யப்பட்ட மூவரும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார். அம்மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

