எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

370 0

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் நண்பர்கள் மூவருடன் உயிரிழந்த நபர் நீராடுவதற்காக குறித்த நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த நபர் நீருக்கடியில் இருந்த கற்களுக்கு இடையில் சிக்கி கொண்ட நிலையில், அவரது சடலம் இன்று காலை வெல்லவாய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.

மாகொடை கந்தானையை வசிப்பிடமாக கொண்ட 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.