மாவனெல்லை புத்தர் சிலை விவகாரம்-16 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

265 0

மாவனெல்லை புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 16 பேரை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 பேருக்கு எதிராக, கடந்த ஏப்ரல் மாதத்தில் கேகாலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.