ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – 23 பேருக்கு விளக்கமறியல்

247 0

dabullaஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலையத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 21 பேரை நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்க ஹம்பாந்தோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் இரண்டு பேரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் கைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அரச உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்ட கைத்தொழில் வலையம் நேற்று பிரதமர் ரணில் தலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கைதொழில் வலையம் நிறுவப்படுவதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் அந்த பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பௌத்த மதகுரு அமைப்புக்கள் உட்பட்ட பல அமைப்புக்கள் கலந்து கொண்டன.

இந்தநிலையிலேயே, அரச சொத்துக்கள் பல சேதப்படுத்தப்பட்டன.

இதன்போது காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையிலான காவற்துறை குழுக்கள் ஆர்ப்பாட்டகாரர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டதுடன், தண்ணீர் பீச்சு மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.