சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

170 0

கொழும்பு 12 – பழைய சோனகத் தெருவில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12,000 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் 43 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 780,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிகரெட்டுகளுடன் வாழைத்தோட்டம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.